தமிழ்நாடு

tamil nadu

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு! தமிமுன் அன்சாரி கண்டனம்!

By

Published : Jan 9, 2021, 5:36 PM IST

நாகை: தமிழினப் படுகொலையின் வலி கூறிய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த நினைவுத்தூண் தகர்க்கப்பட்டதற்கு மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ansari
ansari

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ”முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழினப் படுகொலைகள் துயரம் நிறைந்தவை. அதன் கண்ணீர் நினைவுகள் தமிழ் உலகத்தால் ஆங்காங்கே ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பேரழிவை நினைவூட்டும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. அது போல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணும் அக்கொடுந்துயரத்தின் வலியை கூறிக் கொண்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இரவோடு இரவாக இலங்கை அரசு அந்த நினைவுத் தூணை இடித்து சேதப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மிக மிக கண்டிக்கத்தக்கது. அந்த நினைவுத் தூணை மீண்டும் அதே இடத்தில் எழுப்பிடுவதே நியாயமான நடவடிக்கையாக இருக்கும். இவ்விஷயத்தை இலங்கை அரசு பேரினவாத உணர்வோடு அணுகாமல், சிறுபான்மை தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'பெண்களை இழிவுப்படுத்தி மிகக் கேவலமாகப் பேசிய உதயநிதி' - காவல் ஆணையரகத்தில் புகார்

ABOUT THE AUTHOR

...view details