தமிழ்நாடு

tamil nadu

சிறுமிக்கு பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை காவலாளி கைது!

By

Published : Jul 30, 2020, 3:18 PM IST

நாகப்பட்டினம்: ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவமனை காவலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட காவலாளி
கைது செய்யப்பட்ட காவலாளி

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள ராதாமங்கலம் தெற்காலத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த தாயை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளரும் 9 வயது சிறுமியை ராஜேந்திரன் வீட்டின் சொந்த வேலைக்கு பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. அப்போது வீட்டிற்கு வரும் சிறுமிக்கு தினமும் ராஜேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அப்பகுதிவாசிகள் சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், ராஜேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details