தமிழ்நாடு

tamil nadu

திறந்து கிடந்த பாதாள சாக்கடை மூடி- ட்ராக்டர் மீது அரசுபேருந்து மோதி விபத்து

By

Published : Jun 30, 2022, 10:48 AM IST

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை மூடி திறந்து கிடந்ததால் முன்னே சென்ற டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

திறந்த கிடந்த பாதாள சாக்கடை மூடி- ட்ராக்டர் மீது அரசுபேருந்து மோதி விபத்து
திறந்த கிடந்த பாதாள சாக்கடை மூடி- ட்ராக்டர் மீது அரசுபேருந்து மோதி விபத்து

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பாதாள சாக்கடை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாலும் 12,000 இணைப்புகள் உள்ள திட்டத்தில் 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் ஏற்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதாள சாக்கடை கழிவுநீர் வாய்க்கால்கள், ஆறுகள், வீதிகளில் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் தொற்று நோய்க்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பாதாள சாக்கடை ஆள் நுழைவுத் தொட்டி மூடிகள் பல்வேறு இடங்களில் உடைந்துள்ளதால் விபத்து ஏற்பட்டு வருகிறது.

நேற்று (ஜூன்29) மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தரங்கம்பாடி சாலை வழியாக வடகரைக்கு சென்ற 4பி என்ற அரசு பேருந்து மயிலாடுதுறை கொத்ததெரு என்ற‌ இடத்தில் சாலையில் முன்னே சென்ற டிராக்டரை முந்த முயற்சித்தபோது பாதாள சாக்கடை தொட்டி மூடி திறந்திருந்ததால் பேருந்து டிராக்டர் மீது மோதி விபத்திற்குள்ளானது.

ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தின்‌ முகப்பு கண்ணாடி உடைந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் வாகனம் பாதாள சாக்கடை மூடியால் விபத்து ஏற்பட்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் உடைந்துள்ளதால் விபத்து ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் பாதாள சாக்கடையால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கருமுட்டை விற்பனை விவகாரம்: பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details