தமிழ்நாடு

tamil nadu

குப்பையில் கிடந்த சாமி வெள்ளி கீரிடம்: கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

By

Published : Oct 1, 2020, 12:42 AM IST

மயிலாடுதுறை: சாமி சிலையின் வெள்ளி கிரீடத்தை குப்பைத்தொட்டியில் கண்டெடுத்து தூய்மைப் பணியாளர், அதனை கோயில் நிர்வாகியிடம் ஒப்படைத்தற்குப் பலரும் பாராட்டிவருகின்றனர்.

குப்பையில் கிடந்த சாமி வெள்ளி கீரிடம்: கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்...!
குப்பையில் கிடந்த சாமி வெள்ளி கீரிடம்: கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்...!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலைப் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிபவர் சித்ரா. வழக்கம்போல் தினசரி குத்தாலம் பேரூர் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட சித்ரா குத்தாலம் பஞ்சுக்கார செட்டித்தெருவில் உள்ள குப்பைத்தொட்டியில் குப்பையை அகற்றிச்சென்று, பேரூராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டுசென்று மக்கும் குப்பை, மக்கா குப்பை எனத் தரம் பிரித்துள்ளார்.

அப்போது, அதில் வெள்ளிகிரீடம் ஒன்று கிடப்பதைக் கண்டார். இது குறித்து விசாரிக்கும்போது அது பஞ்சுக்கார செட்டித்தெருவில் உள்ள ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு பொருத்தப்பட்டிருந்த 600 கிராம் எடை கொண்ட வெள்ளியிலான கிரீடம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தூய்மைப் பணியாளர் சித்ரா குப்பைத்தொட்டியிலிருந்த கிரீடத்தை எடுத்துச்சென்று தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகி முத்துக்குமரனிடம் ஒப்படைத்தார்.

சாமியின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த மாலைகளை அகற்றி குப்பைத் தொட்டியில் போடும்போது கிரீடம் மாலையில் சிக்கி குப்பைத்தொட்டிக்குச் சென்றது தெரியவந்தது. குத்தாலம் பேரூராட்சி தூய்மைப்பணியாளர் சித்ராவின் நேர்மையான இச்செயலுக்கு அப்பகுதியினர் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க...அன்லாக் 5.0: திரையரங்குகளை திறக்க அனுமதி

ABOUT THE AUTHOR

...view details