தமிழ்நாடு

tamil nadu

"மாண்டஸ்" எதிரொலி - மின் துண்டிப்பைத் தவிர்க்க மரங்களை அகற்றும் மக்கள்

By

Published : Dec 9, 2022, 5:30 PM IST

மாண்டஸ் புயல் சூறவாளிக் காற்று எதிரொலியால் தங்கள் வீடுகளுக்கு முன் எளிதில் முறிந்து விழும் மரங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெட்டி அகற்றி வருகின்றனர்.

மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல்

மயிலாடுதுறை:வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னை அருகே 270 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. மாமல்லபுரம் வழியாக டிசம்பர் 10ஆம் தேதி அதிகாலை புயலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ரெட் மற்றும் மஞ்சள் அலெர்ட் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் எதிரொலியால் சூறாவளிக் காற்று வீசி வருகிறது.

தரங்கம்பாடி, பெருமாள்பேட்டையில் உள்ளிட்டப் பகுதிகளில் சூறாவளிக் காற்றில் சிக்கி மரங்கள் முறிந்து மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இதையடுத்து சாலை மற்றும் மின்கம்பங்கள் மீது விழுந்த மரங்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

மரங்களை வெட்டி, மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் முன்கூட்டியே வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. மின்சாரம் துண்டிக்கப்படும் பகுதிகளில் துரிதமாக மின் இணைப்புகளை வழங்கக் கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"மாண்டஸ்" எதிரொலி - மின் துண்டிப்பைத் தவிர்க்க மரங்களை அகற்றும் மக்கள்

இதையும் படிங்க:மாண்டஸ் புயல் எப்போது கரையை கடக்கும்.? பாலச்சந்திரன் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details