தமிழ்நாடு

tamil nadu

'மயிலாடுதுறையினை பேரிடர் மாவட்டமாக அறிவியுங்கள்' - பி.ஆர். பாண்டியன்

By

Published : Nov 17, 2022, 7:51 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தைப் பேரிடர் மாவட்டமாக அறிவித்து நூறு விழுக்காடு இழப்பீடு வழங்க வேண்டும் என பி.ஆர். பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

மயிலாடுதுறை: பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பார்வையிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கீழையூர் கிராமத்தில் அய்யாவையனாற்றில் தண்ணீர் வடியாமல் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 மணி நேரத்தில் 44 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால், மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் 90 நாள்களான பயிர்கள் அழுகி, துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளன.

அதனால், தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் தெரிவித்து, மயிலாடுதுறை மாவட்டத்தைப் பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அத்துடன் பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் இழப்பீடு 100 விழுக்காடாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் நிலையில் இல்லாமல் காப்பீட்டு நிறுவனங்கள் பலன் தரும் வகையில் சட்ட திட்டங்கள் இருப்பதை மாற்றி அமைக்க வேண்டும்.

சம்பா பயிர்களை ஆய்வு செய்த பிஆர் பாண்டியன்

2020-21ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீடு திட்டத்தில் ஹெக்டருக்கு 20ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அது 13ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டருக்கு 30ஆயிரம் இடுபொருள் மானியமாக காப்பீட்டு திட்டத்தில் இருந்து இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:138 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை... கேரள மக்களுக்கு 2ஆம் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details