தமிழ்நாடு

tamil nadu

'மோடி அமைச்சர்களை மாற்றியதற்கு பதிலாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' - கே.பாலகிருஷ்ணன்

By

Published : Jul 10, 2021, 6:24 AM IST

மோடி அரசு திறம்பட செயல்பட்டிருந்தால் கரோனாவை முதல் அலையிலேயே கட்டுப்படுத்தியிருக்கலாம், இதற்கெல்லாம் முழு பொறுப்பேற்க வேண்டியவர் மோடியே, இதற்கு பதிலாக மோடி பதவியை ராஜினாமா செய்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மோடி அமைச்சர்களை மாற்றியதற்கு பதிலாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்
மோடி அமைச்சர்களை மாற்றியதற்கு பதிலாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்

மயிலாடுதுறை:கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த மோடி அரசு அமைச்சர்களை மாற்றியதற்கு பதிலாக தனது பதவியை பிரதமர் ராஜினாமா செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது, "பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்களுக்கு முன்னர் தனது அமைச்சரவையை மாற்றி (ஜூலை 7) அமைத்துள்ளார். ஏற்கனவே உள்ள 12 மூத்த அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து, புதுமுகங்களை சேர்த்து தனது ஆட்சிக்கு புதுப்பொலிவு உருவானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இந்த மாற்றத்தை அவர் செய்துள்ளார்.

இந்த மாற்றம் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. கரோனாவில் மிகப்பெரிய இடர்பாடுகளை சந்தித்து, பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். இதன் தோல்வி காரணமாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார்.

மோடி அரசு செயல்பட்டிருந்தால்

மோடி அரசு செயல்பட்டிருந்தால்

மோடி அரசு திறம்பட செயல்பட்டிருந்தால் கரோனாவை முதல் அலையிலேயே கட்டுப்படுத்தியிருக்கலாம். பொருளாதாரம் அதல பாதாளத்துக்குச் சென்றிருக்கிறது. இதிலிருந்து மீள 6 அல்லது 7 ஆண்டுகள் ஆகும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மோடி செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும்

இதற்கெல்லாம் முழு பொறுப்பேற்க வேண்டியவர் மோடியே தவிர, சில அமைச்சர்களை பொறுப்பு காட்டி அவர்களை மாற்றிவிட்டால் அவர்கள் மீது பழியை போட்டு தப்பித்துக்கொள்ள அவர் நினைக்கிறார். இதற்கு பதிலாக மோடி பதவியை ராஜினாமா செய்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும்.

மோடி செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும்
உண்மையான வரலாற்றையே திருத்தி

தேசிய கல்விக்கொள்கை அமலாக்கப்படுவதன் முதல்கட்டமாக, பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் இளங்கலை பட்டப்படிப்புக்கான வரலாற்று பாடங்களை திருத்தவதற்கான முன்மொழிவுகளை தந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் உண்மையான வரலாற்றையே திருத்தி எழுதி பொய்யான வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய நிலையை உருவாக்கும்.

பன்னாட்டு முதலாளிகளுக்கு

பெட்ரோல், டீசல், கேஸ், யூரியா ஆகியவற்றுக்கு மானியம் தர மறுக்கும் ஒன்றிய அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு லட்சக்கணக்கான கோடிகளை மானியமாக வழங்குகிறது. பாஜக ஆட்சியை பயன்படுத்திக்கொண்டு மேகதாதுவில் அணைகட்டும் முயற்சியை எடியூரப்பா மேற்கொள்கிறார். இது குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கெனவே பிரதமரைச் சந்தித்து பேசியுள்ளார்.

நரேந்திர மோடி புதிய அமைச்சரவை

தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்துவிடாது

வருகிற சட்டப்பேரவை கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஒன்றிய அரசு தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவியை தந்துள்ளதால் மட்டும் தமிழ்நாடுக்கு நல்லது நடந்துவிடாது.

ஏனெனில், ஒன்றிய அரசு தமிழ்நாடுக்குத் தர வேண்டிய நிதி பங்கீட்டுத்தொகை, உள்ளாட்சி மன்றங்களுக்குத் தர வேண்டிய நிதி, தடுப்பூசி ஆகியவற்றை சரிவர வழங்கவில்லை. ஒளிப்பதிவு சட்டம் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது.

நம்புகிறார்கள்

தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று 2 மாதங்களில் கரோனா தொற்றை எதிர்கொள்வதோடு, 12 ஆயிரம் கோடிக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறார்கள். இல்லையென்றாலும், அதனை நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தும்.

நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் கணிசமான மக்கள் கோயில் நிலங்களில் குடியிருந்து வருகின்றனர். இவர்களில் ஏழை மக்களுக்கு இலவசமாகவும், ஓரளவு வசதி படைத்தவர்களிடம் தவணை முறையில் பணத்தை வசூலித்துக்கொண்டு பட்டா வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் வற்புறுத்துவோம்" என்றார். அப்போது, கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உடன் இருந்தார்.

இதையும் படிங்க: விரைவில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு - பழனிவேல் தியாகராஜன்

ABOUT THE AUTHOR

...view details