தமிழ்நாடு

tamil nadu

நெல்மூட்டைகளை கொண்டு செல்ல லாரி வரவில்லை.. கவலையில் விவசாயிகள்..

By

Published : Oct 29, 2021, 8:47 AM IST

கோமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 15 நாள்களுக்கு மேலாக கொள்முதல் செய்யப்படாமல் நெல் மூட்டைகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கவலை
விவசாயிகள் கவலை

நாகப்பட்டினம்:குத்தாலம் தாலுகா கோமல் ஊராட்சியில், அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் சம்பா பருவத்துவதற்கான நெல் கொள்முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், 15 நாள்களுக்கு முன்பு முன்னறிவிப்பு ஏதுமின்றி கொள்முதல் திடீரென நிறுத்தப்பட்டது.

இதனால் நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை கிடங்குக்கு கொண்டு செல்லாததால் அந்த நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கின.

நெல் மூட்டைகள்

இருப்பினும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கொள்முதல் நிலைய அலுவலர்கள் விவசாயிகளிடம் இருந்து 5 நாள்கள் வரை நெல்லினை கொள்முதல் செய்துள்ளனர். இதனால் சுமார் 4 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியது.

அதற்கு மேல் வைப்பதற்கு கொள்முதல் நிலைய வளாகத்தில் இடமில்லாததால் கொள்முதல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்குக்கு கொண்டு சென்று விவசாயிகளிடம் மீண்டும் கொள்முதலை தொடங்க கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இதுநாள் வரை கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல்லை கொண்டு செல்ல லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. மேலும் அண்மையில் பெய்த கனமழை காரணமாக அளிக்க வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிவிட்டன.

நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளன

இதனால், கடன் வாங்கி நெல் சாகுபடியில் ஈடுபட்டு அறுவடை செய்த நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவந்து காத்திருக்கும் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க:முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் காலமானார்

ABOUT THE AUTHOR

...view details