தமிழ்நாடு

tamil nadu

முதலமைச்சர் காணொளியில் பங்கேற்ற நிகழ்ச்சி.. கலந்துகொள்ளாத அதிகாரிகள் காலியாக இருந்த சேர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 11:06 PM IST

CM Function: சின்னமேடு கிராமத்தில் 9.78 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று (ஜன.04) திறந்து வைத்தார்.

officers-who-did-not-participate-in-the-chief-ministers-program
முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்காத அதிகாரிகள்

கலந்துகொள்ளாத அதிகாரிகள் கலியாகக் கிடந்த சேர்கள்

மயிலாடுதுறை:பூம்புகார் தொகுதிக்குட்பட்ட சின்னமேடு மீனவ கிராமத்தில் ரூபாய் 9.78 கோடி மதிப்பீட்டில், கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நேர்கல் தடுப்புச் சுவர் மற்றும் மீன் ஏலக்கூடத்தையும், வானகிரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளத்தையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.04) கானெளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

முன்னதாக இதற்கான திறப்புவிழா நிகழ்ச்சியைப் பொதுமக்கள் நேரலையில் காணும் வகையில் 2 பெரிய எல்இடி திரை வைக்கப்பட்டு விழா மேடையில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வானகிரி கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில் சின்னமேடு சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டும் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்காகப் போடப்பட்டு இருந்த இருக்கைகளா காலியாக இருந்தது. முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகள் கலந்து கொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வானகிரி மீனவர் கிராமத்தில் காணொளி காட்சி நிகழ்ச்சியை முடித்துவிட்டு, சின்னமேடு மீனவ கிராமத்திற்குச் சென்ற பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன்.

மீன்வளத்துறை இணை இயக்குநருடன் எம்.எல்.ஏ இணைந்து மீன் ஏலக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தனர். அப்போது மீனவர்கள் சிலர் நேர்கல் தடுப்புச்சுவரின் நீளத்தை அதிகப்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செய்துதர வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாபவே வந்து இருந்த திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சேர்ந்த துளசிரேகாவை சிறப்புரையாற்ற அழைக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ரேகா மீன்வளத்துறை அதிகாரியிடம் நிகழ்ச்சி முறையாக நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார். இதற்குப் பதில் அளிக்க முடியாமல் மீன்வளத்துறை அதிகாரி நழுவி சென்றார், இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:வெள்ள நிவாரண நிதி: தமிழக அனைத்து கட்சி எம்.பி-கள் அமிஷ்சாவை சந்திக்க உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details