தமிழ்நாடு

tamil nadu

முறை தவறிய உறவில் இருந்த ஒரு பெண்ணுக்கு போட்டி; நண்பனை கொலை செய்த நபர்.. நாகை சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 12:28 PM IST

Nagapattinam murder case: கள்ளக்காதலியுடன் இருப்பதில் ஏற்பட்ட போட்டியில் நண்பன் உடன் இருந்தே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

in Nagapattinam person killed a friend in love affair issue
நண்பனை கொலை செய்த நபர் கைது

நாகப்பட்டினம்:செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர், ரவிச்சந்திரன் (55). இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இவர் தற்போது வேளாங்கண்ணி அருகே பரவையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், கருவேலங்கடை மகா காளியம்மன் கோவில் முன்பாக கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி, நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும், இந்த கொலை சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ரவிச்சந்திரனின் கூட்டாளியான தெற்கு பொய்கைநல்லூர் வடக்கு தெருவைச் சேரந்த நடவண்டி மோகன் என்கின்ற மகேஸ்வரனும், கொலை செய்யப்பட்ட ரவிச்சந்திரனும் பகலில் ஒன்றாக சுற்றித் திரிந்தது தெரிய வந்துள்ளது.

மேலும், ரவிச்சந்திரன் தனது வீட்டிற்கும் மகேஸ்வரனை அழைத்துச் சென்றது, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் மகேஸ்வரனை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு இருவரும் முறை தவறிய உறவில் இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் அந்த பெண் உடன் யார் இருப்பது என்ற போட்டா போட்டி இருவருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் ரவிச்சந்திரனை கொலை செய்ய மகேஸ்வரன் முடிவு செய்துள்ளார்.

இதற்காக ரவிச்சந்திரனோடு பகல் பொழுதில் ஒன்றாக சுற்றித் திரிந்து, இரவில் சரக்கு வாங்கி கொடுத்து, நண்பருடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கொலை செய்த மகேஸ்வரனையும், கொலைக்கு உடந்தையாக இருந்த கருவேலங்கடை பகுதியைச் சேர்ந்த ஞானபிராகசம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். முறை தவறிய உறவு வைத்த பெண் உடன் யார் இருப்பது என்ற போட்டியில், நண்பனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் நாகையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆணுறுப்பை அறுத்து கொலை.. தகாத உறவின் விபரீதம் - சேலத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details