தமிழ்நாடு

tamil nadu

ஊரைவிட்டு ஒதுக்கிய கிராமம் - தற்கொலைக்கு முயன்ற குடும்பம்!

By

Published : Aug 10, 2021, 12:27 PM IST

சீர்காழி அருகே 20 ஆண்டுகள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் மனமுடைந்த மீனவகுடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் எலி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற குடும்பம்
தற்கொலைக்கு முயன்ற குடும்பம்

நாகை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமையன். இவர் மீன்பிடத் தொழில் செய்கிறார்.

இந்நிலையில் தொடுவாய் கிராமத்தில் ஊர் திருவிழாவில் ராமையனுக்கு மரியாதை செலுத்தியதால் ஊர் கட்டுப்பாட்டை மீறி மரியாதை செலுத்தியதாகக் கூறி தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்தார்கள் ராமையன் குடும்பம்,அவரது சகோதரர்கள் குடும்பத்தை 20 ஆண்டுகள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகத் தீர்ப்பளித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ராமையன், அவரது 15 வயது மகள்,10 வயது மகன் ஆகிய மூவரும் எலி மருந்தைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதையடுத்து, மூன்று பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிய நிலையில் உறவினர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து சீர்காழி காவல் துறையினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் பாதுகாப்புப் பணி: உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனம் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details