தமிழ்நாடு

tamil nadu

'பாஜக தலைவர் அண்ணாமலை என்றுமே செல்லாக்காசு' - அமைச்சர் பொன்முடி

By

Published : Jun 18, 2022, 12:24 PM IST

போலீஸ் வேடமிட்டு இருந்த அண்ணாமலை தற்போது அரசியலுக்கு வந்து ஏதேதோ பேசுகிறார் எனவும் அவர் என்றுமே செல்லாக்காசு எனவும் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார் பேருந்து நிலையத்தில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நேற்று (ஜூன்17) மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கா.பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இளைஞர்களிடம் சமூக நீதி சமுதாய சமத்துவ கொள்கைகள், மதச்சார்பற்ற தன்மை வளர வேண்டும் என்பதைத்தான் 'திராவிட மாடல்' ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். பாஜக தலைவர் அண்ணாமலையை பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. செல்லாத காசை நாம் ஏன் சுண்டிப் போட்டு பார்க்கவேண்டும்; அவரெல்லாம் போலீஸ் வேஷம் போட்டவர். தற்போது அரசியலுக்கு வந்து என்னென்னமோ செய்கிறார். அவருக்கு சமூக நீதி, மதக்கொள்கை உள்ளிட்ட எதுவும் தெரியாது. பாஜக ஆட்சியில் உதவி கிடைக்காதா.. என்பதற்காக பேசுகிறார். பாஜக ஆட்சி இல்லை என்றால் ஒன்றும் பேச மாட்டார்.

கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு

அதிமுக, பாஜகவுடன் இருந்த மாதிரி இருந்தது; தற்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவர்களுக்குள்ளேயே பெரிய போட்டி உள்ளது. ஓபிஎஸ்ஸா இபிஎஸ்ஸா என்ற போட்டிதான் அந்தக் கட்சியில் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் கடந்த 10 வருடங்களாக நாட்டை குட்டிச் சுவர் ஆக்கியுள்ளார்கள். எந்த பணியும் நடக்கவில்லை.

இதற்கெல்லாம் விடிவு காலம் வரும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின், உயர்கல்வியை பொற்காலமாக மாற்றுவோம் என்று சொல்லி அனைத்து கல்லூரிகளுக்கும் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். பின்னர், திமுகவில் புதிதாக இணைந்த பல்வேறு கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: 'படித்த முட்டாள்.. நோட்டாவோடு போட்டி.. வேலை வெட்டி இல்லையா?' - அண்ணாமலையை வசைபாடிய செந்தில் பாலாஜி

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details