தமிழ்நாடு

tamil nadu

தமிழ் முக்கியத்துவமற்ற மொழிப் பாடமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டம்!

By

Published : Oct 26, 2021, 6:13 AM IST

சிபிஎஸ்இ பாடப்பிரிவுகளில் தமிழ் முக்கியத்துவமற்ற மொழிப் பாடமாக இணைக்கப்பட்டிருப்பது ஒன்றிய அரசு மேற்கொள்ளும் தேவையற்ற செயல் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் தொடர்பான காணொலி
செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் தொடர்பான காணொலி

மயிலாடுதுறை: மயிலாடுதுறையின் கோமல் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியின் மூலமாக கட்டப்பட்ட ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புதிய கிளை நூலகக் கட்டட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் , “கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டதால், பள்ளி செல்லும் குழந்தைகள் மனதளவில் மிகுந்த பாதிப்புக்குள்ளானதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் தொடர்பான காணொலி

டிசம்பர் முதல் மாதிரித் தேர்வுகள்

மாணவர்களை மனதளவில் மேம்படுத்தவே நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பெற்றோரின் அச்சத்தை போக்கும் வகையில் பள்ளிக்கு வருவதும், வராததும் மாணவர்களின் விருப்பம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிக்கு வராத மாணவர்கள் கல்வி கற்க ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி உள்ளிட்டவை தொடர்ந்து இயங்கும்.

55 விழுக்காட்டு அளவு வழக்கமான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்த முடியாததை கருத்தில் கொண்டு, டிசம்பர் முதல் மாதந்தோறும் மாதிரி தேர்வுகள் நடைபெறும். பின்னர் தேர்வு முறையில் மாற்றமின்றி மார்ச், ஏப்ரல் மாதங்களில் வழக்கமான தேர்வுகள் நடைபெறும்.

ஊர்புற நூலகர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். சிபிஎஸ்இ பாடப் பிரிவில் உள்ள மேஜர் லாங்வேஜ், மைனர் லாங்வேஜ் என்பது தவறானது. நமது தாய்மொழியான தமிழ் மைனர் லாங்வேஜாக இருக்கிறது. ஒன்றிய அரசு தேவையில்லாத முடிவுகளை எடுக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டப்பேரவை கொறடா கோவி.செழியன், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் ரா.லலிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:காவிரி உபரி நீர்திட்டத்தை உடனடியாக செயல்படுத்துக - ஜி.கே.மணி வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details