தமிழ்நாடு

tamil nadu

செல்போன் வாங்கியதில் தகராறு: கர்ப்பிணி தற்கொலை

By

Published : Jul 11, 2021, 7:15 PM IST

குத்தாலம் அருகே கணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து நிறைமாத கர்ப்பிணியான மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(32). லாரி டிரைவரான இவருக்கும், மல்லியம் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (27) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு வயதில் ஒரு மகள் இருக்கிறார். தற்போது சூர்யா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு சிலம்பரசன் ரூ.16 ஆயிரத்திற்கு புதிதாக ஆன்ட்ராய்டு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை அறிந்த சூர்யா வருமானத்திற்கு மீறி செல்போன் தேவையா என கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கோபித்துக்கொண்டு சூர்யா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சமாதானத்திற்கு பிறகு தற்கொலை

சில நாள்களுக்கு பின் சூர்யாவை அவரது தாயார் அம்சவல்லி சமாதானம் செய்து, கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் இன்று (ஜூலை 11) அதிகாலை 3 மணிக்கு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது மின் விசிறி பொருத்தும் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரை மீட்ட உறவினர்கள் சூர்யாவை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

சிலம்பரசன் - சூர்யா தம்பதியினருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு காவல் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

இதையும் படிங்க: அமைச்சர் சேகர் பாபு கூட்டத்தில் புகுந்த சினேக்!

ABOUT THE AUTHOR

...view details