தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறையில் முன்பகையால் கூலி தொழிலாளி வெட்டிக்கொலை!

By

Published : Sep 9, 2020, 3:04 PM IST

மயிலாடுதுறை: மகளின் இறப்பிற்கு பழிதீர்க்கும் வகையில் கூலி தொழிலாளியை கொலை செய்த மூன்று பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

Arrest
Arrest

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கப்பூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மதிவாணன் (55). இவரது மனைவி பூங்கோதை (47).

இவர்களது மகன் கார்த்திக் என்பவர் அதே பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் ரவி என்பவரது மகள் இலக்கியாவை 2015 ஆம் ஆண்டு காதலித்தார்.

அதனை ரவி கண்டித்ததால், மனமுடைந்த இலக்கியா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இலக்கியா இறப்பிற்கு கார்த்திக்தான் காரணம் என அவரைக் பழிதீர்க்க ரவி காத்திருந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு ரவி அவரது மகன் ஸ்ரீராம், உறவினரான பாலையூரைச் சேர்ந்த சதீஷ் ஆகிய மூவரும் சேர்ந்து கார்த்திகைக் கொலை செய்ய சென்றுள்ளனர்.

அவர் இல்லாததால் மதிவாணனையும், அவரது மனைவி பூங்கோதையையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கை துண்டிக்கப்பட்டு பலத்த காயம் அடைந்த பூங்கோதை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த பெரம்பூர் காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவ இடத்திற்கு சென்று மதிவாணன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ரவி, ஸ்ரீராம், சதீஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details