தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 'ஆக்சிஜன் பிளான்ட்' திறப்பு!

By

Published : May 30, 2021, 7:19 AM IST

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் 6 டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட்டை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

mayiladuthurai
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட, 6 டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட் அமைக்கப்பட்டது. சுமார் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆக்சிஜன் பிளான்ட்டை, சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்த வைத்தார்.

பின்னர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில், கரோனா தொற்று காலத்தில் மருத்துவச் சேவையாற்றப் புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணையை வழங்கினார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், " புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் பிளான்ட் மூலம், மருத்துவமனையில் உள்ள 160 ஆக்சிஜன் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு இன்றி ஆக்சிஜன் கொடுப்பதோடு, கூடுதலாக 50 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க முடியும். கரோனா நோயாளிகள் வெளிமாவட்டங்களுக்குச் செல்லாமல் மயிலாடுதுறையிலேயே சிகிச்சை பெற முடியும்.

'ஆக்சிஜன் பிளான்ட்' திறப்பு!

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணியாற்றுவதற்காக 18 மருத்துவர்கள், 62 செவிலியர்கள், 32 பல்நோக்கு பணியாளர்கள், லேப்டெக்னிஷியன் 3 பேர் உட்பட பல்வேறு பணிகள் என, 121 பேருக்குப் போர்க்கால அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு பகுதிகளில் வீட்டிற்கு நேரடியாக சென்று கரோனா பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம். மாவட்டத்தில் நேற்று முன்தினம்(மே.28) வரை 54 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உயிரைக் காக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details