தமிழ்நாடு

tamil nadu

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவிக்கு ஆட்சியர் கொடுத்த சர்ப்ரைஸ்!

By

Published : Feb 14, 2023, 9:51 AM IST

மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவியை மயிலாடுதுறை ஆட்சியர் நேரில் சென்று வாழ்த்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுதியுள்ளது.

குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவி
குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவி

குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவியை பள்ளிக்கு தேடி வந்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை: இந்திய விளையாட்டு ஆணையத்தில் பாக்ஸிங் பிரிவில் பயிற்சி பெற்று வரும் மாணவி ரோஷினி மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சமீபத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதுகுறித்து கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திங்கட்கிழமை காலை வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்கப்பதக்கம் வென்ற மாணவி ரோஷினி மற்றும் மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நேரில் சென்று சால்வை அணிவித்துப் வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது தனது லட்சியம் என மாணவி ரோஷினி தெரிவித்தார்.

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் "நம் வாழ்வில் சைக்கிள் ஓட்டும் பொழுது நமது ஆழ் மனதில் பதிந்து விடுவதால் கால்களை மாறி மாறி பெடல் மிதிப்பது குறித்து அனிச்சை செயலாக நடைபெறும். அதுபோல் நாம் அடைய வேண்டிய லட்சியம் குறித்து தினம் தோறும் ஒரு பேப்பரில் 10 முறை எழுதி வைத்து அதை மீண்டும் மீண்டும் படித்து வருவதால் நமது ஆழ்மனதிற்கு அது சென்று லட்சியத்தை நோக்கி நாம் ஆழ்மனது வாய்ப்புகளை உருவாக்கி தரும். இதுதான் வெற்றியின் ரகசியம் என்று மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

நேரில் வந்து பாராட்டிய மாவட்ட ஆட்சியருக்கு மாணவி ரோஷினி பாக்சிங் பயிற்சியை செய்து செய்து காண்பித்து அசத்தினார். இதனை அங்கு திரண்டிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

இதையும் படிங்க: புது ரூட்டில் பண மோசடி; பீகார் இளைஞர் கைது.. சென்னை மேன்சன் பாய்ஸ் உஷார்!

ABOUT THE AUTHOR

...view details