தமிழ்நாடு

tamil nadu

கொட்டும் மழையிலும் ஜனநாயக கடைமையாற்றும் வாக்காளர்கள்

By

Published : Oct 9, 2021, 12:35 PM IST

மயிலாடுதுறை: செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 30ஆவது வார்டு ஒன்றியகுழு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக - திமுக வேட்பாளர்கள் தங்களது வாக்கினை செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திரபாடி, திருக்களாச்சேரி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய 30ஆவது வார்டில் காலியாக இருந்த ஒன்றிய குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் இன்று (அக்.9) நடைபெற்றது.

இந்த வார்டில் அதிமுக, திமுக, அமமுக மற்றும் சுயேச்சை என 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சந்திரபாடி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் அதிமுக வேட்பாளர் சபரிநாதன், திமுக வேட்பாளர் செல்வம் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

இதேபோல், காட்டுச்சேரி, திருக்களாச்சேரி உள்ளிட்ட 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். முன்னதாக வாக்காளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசர் வழங்கப்பட்டிருக்கிறது. இன்று (அக்.09) காலை முதலே பரவலாக மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெறுகிறது.

இதையும் படிங்க: நெல்லையில் உள்ளாட்சித் தேர்தல் - கள நிலவரம்

ABOUT THE AUTHOR

...view details