தமிழ்நாடு

tamil nadu

திருவாவடுதுறை ஆதீனத்தில் குருமகா சன்னிதானம் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை

By

Published : Aug 15, 2022, 9:57 PM IST

இந்திய சுதந்திரத்தை செங்கோல் அளித்து அடையாளப்படுத்திய திருவாவடுதுறை ஆதீனத்தில் குருமகா சன்னிதானம் தேசியக் கொடியை ஏற்றினார்.

சுதந்திர தின பவள விழா
சுதந்திர தின பவள விழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் 14-ஆம் நூற்றாண்டில் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்ட திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதை திருவாவடுதுறை ஆதினம் சார்பில் கோளறு பதிகம் பாடி, இந்தியாவின் முதல் பிரதமரான நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோலே அடையாளப்படுத்தியது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தில் இன்று 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு ஓதுவாமூர்த்திகள் கோளறு பதிகமும், மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடி, அங்கு அமைக்கப்பட்டிருந்த 45 அடி உயரமுள்ள கொடிமரத்தில் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தின பவள விழா

திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதற்கான செங்கோலை மௌண்ட் பேட்டன் பிரவுவிடமிருந்து பெற்று நேருவிடம் அளித்தபோது செங்கோல் வைத்துக்கொண்டு நேருவுடன் கட்டளைத் தம்பிரான் சடைச்சாமி என்கிற குமாரசாமி தம்பிரான் எடுத்துக்கொண்ட புகைப்பட கல்வெட்டை திருவாவடுதுறை ஆதினம் திறந்து வைத்தார்.

பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். தொடர்ந்து ஆதீனம் சார்பில் 1500 அடி நீளமும், 9 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட தேசியக்கொடியை ஆதீனம் முன்னிலையில் பொதுமக்கள் மாணவ மாணவிகள் கைகளில் உயர்த்தி பிடித்து வந்தே மாதரம் என என்று வீரமுழக்கமிட்டு ஊர்வலமாக சென்றது காண்போருக்கு சுதந்திரத்தின் பெருமையை அடையாளப்படுத்தி மெய்சிலிர்க்க வைத்தது.

இதையும் படிங்க:பள்ளி நண்பர்களுடன் இணைந்து வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details