தமிழ்நாடு

tamil nadu

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டி விவசாயிகள் சாலை மறியல்!

By

Published : Aug 20, 2020, 4:29 PM IST

மயிலாடுதுறை: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் சாலையில் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர், எடக்குடி கிராமங்களில் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று ஜூலை மாதம் 23 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்காலிக ஷெட் அமைத்தால் உடனடியாக திறக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்ததை அடுத்து மங்கைநல்லூர், எடக்குடியில் தற்காலிகமாக ஷெட்டை விவசாயிகள் அமைத்துள்ளனர்.

இதனையடுத்து நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என எண்ணி விவசாயிகள் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளைக் கொண்டு வந்து கொள்முதல் நிலையம் அமைந்துள்ள இடத்தில் அடுக்கி வைத்து இரவு, பகலாக காவல் காத்து வருகின்றனர்.

ஆனால் தற்போது வரை கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை மங்கைநல்லூர் மெயின் ரோட்டில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் அலுவலர்களிடம் பேசி கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் சாலை மறியல் மறியலை தற்காலிகமாக கைவிட்டனர். இதனால் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details