தமிழ்நாடு

tamil nadu

வரதட்சணை கொடுமை... பெண் மரணம்: கோட்டாட்சியர் விசாரணைக்குப் பரிந்துரை

By

Published : Mar 10, 2021, 5:06 PM IST

மயிலாடுதுறை: வரதட்சணைக் கொடுமையால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து பெண் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர் கோட்டாட்சியர் விசாரணைக்குப் பரிந்துரைத்தனர்.

வரதட்சணை கொடுமையால் இறந்த பெண்
வரதட்சணை கொடுமையால் இறந்த பெண்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எரவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமு (40). வேளாண்மை கூலித் தொழிலாளியான இவருக்கும், குத்தகைவெளி கிராமத்தைச் சேர்ந்த ராமானுஜம் மகள் புனிதா (35) என்பவருக்கும் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

வரதட்சணை கொடுமை

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் புனிதாவிடம் கணவர் சோமு, மாமியார் இந்திராணி ஆகியோர் வரதட்சணை கேட்டும், நடத்தையில் சந்தேகப்பட்டும் அடிக்கடி, அடித்து துன்புறுத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் புனிதா குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையால், தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்பு சோமுவின் சகோதரர் ரமேஷ், புனிதாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வீட்டிற்கு அழைத்துள்ளார்.

இறப்பில் சந்தேகம்

அதனை ஏற்று புனிதா, கணவர் வீட்டிற்குச் சென்ற நிலையில் களைக்கொல்லி பூச்சி மருந்தை குடித்துள்ளார். பின்னர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மயக்கநிலையில் இருந்த புனிதா நேற்றிரவு (மார்ச் 9) இறந்துள்ளார்.

கோட்டாட்சியர் விசாரணை

புனிதாவின் தாய், உறவினர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக பெரம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன்பேரில் காவல் துறையினர் தற்கொலை வழக்குப்பதிவு செய்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் விசாரணை செய்ய பரிந்துரைசெய்தனர்.

இதையும் படிங்க: வரதட்சணை குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் சிறை! பேரவையில் மசோதா தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details