தமிழ்நாடு

tamil nadu

போலீஸ் அனுமதி மறுப்பால் வெறிச்சோடிய டேனிஷ் கோட்டை கடற்கரை

By

Published : Jan 17, 2021, 3:54 AM IST

காணும் பொங்கல் தினத்தில் சுற்றுலா தலமான தரங்கம்பாடியில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால், டேனிஷ் கோட்டை கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Danish castle beach  Pongal 2021  Mayiladudurai latest news  Mayiladudurai district news  Danish castle beach deserted  பொங்கல் 2021  டேனிஷ் கோட்டை கடற்கரை  மயிலாடுதுறை மாவட்டச் செய்திகள்  பொங்கல்
Danish castle beach Pongal 2021 Mayiladudurai latest news Mayiladudurai district news Danish castle beach deserted பொங்கல் 2021 டேனிஷ் கோட்டை கடற்கரை மயிலாடுதுறை மாவட்டச் செய்திகள் பொங்கல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் காணும் பொங்கல் தினத்தில் புகழ்பெற்ற தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் வழக்கமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் கூடுவார்கள்.
இந்த ஆண்டு கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை தினங்களில் கூடுவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது.
இதனால், காணும் பொங்கல் பண்டிகை தினத்தில் கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், காணும் பொங்கல் தினத்தில் டேனிஷ் கோட்டை கடற்கரை பகுதிக்கு ஏராளமான வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகளை காவலர்கள் திருப்பி அனுப்பினர். மேலும், பொறையார் காவலர்கள் தரங்கம்பாடி கடற்கரை நோக்கி செல்லும் சாலை மற்றும் கடற்கரையில் பல இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் துறைமுகம் பகுதியில் கூடினர். போலீசார் எச்சரிக்கையை மீறி கூட்டம் கூடியது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details