தமிழ்நாடு

tamil nadu

வேளாண்மை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மோடியின் உருவபொம்மை எரிப்பு!

By

Published : Sep 22, 2020, 11:56 AM IST

Updated : Sep 22, 2020, 8:10 PM IST

CPM party members burns modi effigy
சிபிஎம் போராட்டம்

11:49 September 22

மோடி உருவபொம்மை எரித்து சிபிஎம் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண்மை சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்கு ஆதரவளித்த தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக விவசாய சங்க மாவட்டத் தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, வேளாண்மை சட்டத்திருத்த மசோதா நகலை தீயிட்டு எரித்தனர். 

தொடர்ந்து பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனங்களையும் எழுப்பினர்.  

இந்தப் போராட்டத்தின்போது எரிந்துகொண்டிருந்த மோடியின் உருவபொம்மையை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்ற காவல் துறையினரை, போராட்டக்காரர்கள் தடுத்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.  

இதையும் படிங்க:மின் கேபிள் உருளையில் சிக்கிய நாய் உயிருடன் மீட்பு!

Last Updated : Sep 22, 2020, 8:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details