தமிழ்நாடு

tamil nadu

எரிந்த நிலையில் பறந்து வந்த பாராசூட்டுகள்: தீப்பிடித்த தென்னை மரம்

By

Published : Feb 17, 2021, 9:11 PM IST

நாகப்பட்டினம்: வடுகச்சேரி பகுதியில் எரிந்த நிலையில் பறந்து வந்த பாராசூட்டால் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.

எரிந்த நிலையில் பறந்து வந்த பாராசூட்
எரிந்த நிலையில் பறந்து வந்த பாராசூட்

நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் நேற்றிரவு (பிப்.16) எரிந்த நிலையில் இரண்டு பாராசூட்டுகள் பறந்து வந்தன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

எரிந்த நிலையில் பறந்து வந்த பாராசூட்

பாராசூட்டுகளில் ஒன்று, இளையராஜா என்பவரது வீட்டின் அருகேயுள்ள தென்னை மரத்தில் விழுந்து தீ பிடித்தது. உடனே பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தீயை அணைத்தனர். மற்றொன்று அங்குள்ள வயல்வெளி வழியாக பறந்து சென்றது.

இது குறித்து தகவலறிந்து வந்த வேளாங்கண்ணி காவல் துறையினர், அந்தப் பாராசூட்டை கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

மேலும் இந்த பாராசூட் வானவேடிக்கைக்கு பயன்படுத்தக் கூடியதா? போன்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காதலில் ஏமாற்றம் - இளம்பெண் தீ குளித்து உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details