தமிழ்நாடு

tamil nadu

நாகையில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Mar 4, 2020, 8:07 PM IST

நாகப்பட்டினம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய டெல்டா விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

caa against protest
caa against protest

நாகப்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய டெல்டா விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வலியுறுத்தி பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவரி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

அப்போது, திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வேளாண் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இணைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நாகப்பட்டினத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேலும். வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பில் விவசாய சங்க பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதேபோன்று கடலோர பகுதியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: 'அடடா மழைடா... கனமழைடா' - குமரியில் வாகன ஓட்டிகள் அவதி

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details