தமிழ்நாடு

tamil nadu

வாக்கு எண்ணும் மைய முன்னேற்பாட்டு பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்

By

Published : May 1, 2021, 9:16 PM IST

மயிலாடுதுறையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மைய முன்னேற்பாடு பணிகளை குறித்து மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு மேற்கோண்டார்.

முன்னேற்பாட்டு பணி
முன்னேற்பாட்டு பணி

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மன்னம்பந்தல் தனியார் கல்லூரியில் நாளை நடைபெற உள்ளன. அதன்காரணமாக கல்லூரிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை தொகுதியின் 342 வாக்குபெட்டிகளின் வாக்குகள் 25 சுற்றுகளாகவும், சீர்காழி தொகுதி 348 வாக்குபெட்டிகளின் வாக்குகள் 25 சுற்றுகளாகவும், பூம்புகார் தொகுதி 383 வாக்குப்பெட்டிகளின் வாக்குகள் 28 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன.

அதற்காக மையத்தில் முன்னேற்பாடுகள் நடைபெற்றன. அப்பணியினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா இன்று ஆய்வு செய்தார். மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது 2 ஏடிஎஸ்பிக்கள், 14 காவல் ஆய்வாளர்கள், 40 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 700 காவலர்கள் பாதகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதையும் படிங்க:தேர்தல் வெற்றி கொண்டாட்ட ஊர்வலம், பட்டாசு வெடிப்புக்குத் தடை

ABOUT THE AUTHOR

...view details