தமிழ்நாடு

tamil nadu

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்களைத் தாக்கிய பாஜக நிர்வாகி!

By

Published : Jul 31, 2020, 3:38 AM IST

நாகை: குத்தாலம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள ஊழியர்களிடம் மாமூல் கேட்டு தாக்கிய பாஜக ஒன்றிய கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்களை தாக்கிய பாஜக நிர்வாகி!
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்களை தாக்கிய பாஜக நிர்வாகி!

நாகை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக மயிலாடுதுறை கோட்டத்தில் 20 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றான குத்தாலம் தாலுக்கா கோமல் ஊராட்சியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் வீதம் வசூல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோமல் பகுதியைச் சேர்ந்த பாஜக ஒன்றிய கவுன்சிலரான வினோத் என்பவர், அங்கு சென்று கொள்முதல் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் சுமைதூக்கும் தொழிலாளர் கலியமூர்த்தி என்பவர் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கொள்முதல் நிலைய ஊழியர்கள் தாக்கியதில் தினகரன் என்பவர் காயமடைந்தார்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடவடி செய்யும் பாஜக நிர்வாகி!

இதில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் மூட்டை ஒன்றுக்கு 10 ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவர்களைத் தாக்கியதாகவும் கொள்முதல் நிலைய ஊழியர்கள் சார்பில் பாஜக ஒன்றிய கவுன்சிலரான வினோத் மீது பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஊழியர்கள் சிறுது நேரம் நெல் கொள்முதல் நிலைய வாசலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து வினோத் உள்ளிட்ட இரு தரப்பினரையும் சேர்த்து நான்கு பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க...மக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ளவேண்டும்- அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details