தமிழ்நாடு

tamil nadu

பேரவைத் தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் கால் பதிக்கும் - நடிகர் ராதாரவி

By

Published : Nov 16, 2020, 6:42 PM IST

நாகப்பட்டினம்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் கால் பதிக்கும் என நடிகர் ராதாரவி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Radha Ravi
Radha Ravi

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த பணமேடு கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாவி கூறுகையில், "வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் கால்பதிக்கும். வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே திமுகவில் சேர்த்துள்ளார்கள்.

இது அரசியலில் சகஜம், வாக்குரிமை உள்ள அனைவரும் கட்சிகளில் இணையலாம், நடிகர்களும் அவ்வாறே இணைகின்றனர், அதில் தவறு ஏதும் கிடையாது" என்றார்.

நடிகர் ராதாரவி பத்திரிக்கையாளர் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details