தமிழ்நாடு

tamil nadu

சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை

By

Published : Mar 3, 2022, 10:23 AM IST

நாகையில் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்ற கடை உரிமையாளரை, சுகாதாரத்துறை அலுவலர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை
கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை

நாகப்பட்டினம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மகப்பேறு மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்கி உட்கொண்ட இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் சென்ற புகாரின் அடிப்படையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் நாகையை அடுத்த புத்தூரிலுள்ள கண்ணதாசன் என்பவருக்குச் சொந்தமான தனிஷ்கா என்ற மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அப்பகுதிக்குச் சென்ற சுகாதாரத்துறை அலுவலர்கள் வாடிக்கையாளர் போல சென்று கருக்கலைப்பு மாத்திரை கேட்கவே, 390 ரூபாய் மதிப்புள்ள கருக்கலைப்பு மாத்திரைகளை ரூ.2,500 ரூபாய்க்கு எந்தவித மருந்து சீட்டும் இல்லாமல் கண்ணதாசன் விற்பனை செய்துள்ளார்.

அப்போது கையும் களவுமாக மருந்தக உரிமையாளர் கண்ணதாசனை பிடித்த சுகாதாரத் துறை இணை இயக்குநர் மகேந்திரன் தலைமையிலான அலுவலர்கள், கடையில் ஆய்வு மேற்கொண்டு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த கருக்கலைப்பு மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை

தொடர்ந்து நாகை நகர காவல் நிலையத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள் மருந்தக உரிமையாளர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மருந்தகத்தில் மருந்து சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை வாடிக்கையாளர் போல் அலுவலர்கள் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:காவல் நிலையம் முன் கத்தியுடன் சிக்கிய இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details