தமிழ்நாடு

tamil nadu

மயானத்திற்கு வேண்டும் அடிப்படை வசதி; மக்கள் ஆர்ப்பாட்டம்..!

By

Published : Oct 21, 2022, 8:44 PM IST

மயிலாடுதுறை அருகே ஈமக்கிரியை மண்டபம் இல்லாத மயானத்துக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி மக்கள் கண்டன முழக்கமிட்டனர்.

மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை:மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காகக் கிட்டப்பா பாலம் அருகே சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டிற்குச் செல்வதற்கு நிரந்தர பாதை இல்லை.

யாரேனும் இறந்தால் உடலை எடுத்துச் செல்வதற்கு அவர்களது உறவினர்கள் பெரும் தொகையைச் செலவிட்டு ஜேசிபி எந்திரம் அல்லது பணியாட்களைக் கொண்டு பாதையைச் சுத்தம் செய்து அதன் பின்னரே உடலைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், அங்கு இறுதி காரியம் நடத்துவதற்கு, ஈமக்கிரியை மண்டபம் இல்லாத நிலை உள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்து பாதை அமைத்துத் தரக் கோரியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் உயிரிழந்தவருக்கு இன்று ஈமக்கிரியை நடத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாகத் தொடர் மழை பெய்து வருவதால், இறுதி காரியத்தை அமர்ந்து நடத்துவதற்காக, அங்குத் தகர ஷீட்டில் தற்காலிக மேற்கூரை அமைத்து ஈமக்கிரியை நடத்தினர்.

பின்னர் மாப்படுகை மயானத்துக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வலியுறுத்தி இயற்கை விவசாயி ராமலிங்கம் தலைமையில் அப்பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதி கோரி சிறிது நேரம் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதையும் படிங்க:தமிழ்நாடு மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்..

ABOUT THE AUTHOR

...view details