தமிழ்நாடு

tamil nadu

மாஸ்க் போடுங்க பாஸ்... முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி - உயர்நீதிமன்றம் அதிரடி

By

Published : Jun 20, 2022, 2:10 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி - உயர்நீதிமன்றம் அதிரடி
முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி - உயர்நீதிமன்றம் அதிரடி

மதுரை:தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் தினசரி பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று ஜுன் 20ஆம் தேதி முதல் நீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும், மேலும் வழக்குக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் நீதிமன்றம் வருவதைத் தவிர்க்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பதிவாளர் தரப்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இதன்படி இன்று நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள் என அனைவரும் முககவசம் அணிந்து நீதிமன்றத்திற்கு வந்தனர். நீதிமன்றத்திற்குள் வரும் அனைவரும் முக கவசம் அணிந்து வருகிறார்களா? என்பதை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து நீதிமன்றத்திற்குள் அனுமதித்தனர்.

மேலும் நீதிமன்றத்திற்கு வரும் பார்வையாளர்கள், காவல்துறையினர் தனிவழி அமைக்கப்பட்டு நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வெளிநபர்கள், பார்வையாளர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வரும் போது அவர்கள் முழுமையான சோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: கரோனா தொற்று அதிகரிப்பு - பள்ளி, கல்லூரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details