தமிழ்நாடு

tamil nadu

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை இசை வழிபாடு! இசையின் வாயிலாக அம்பாளை தரிசித்த பக்தர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 8:21 AM IST

vijayadashami festival : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு 108 வீணை இசை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இசைக் கலைஞர்கள் வீணை இசையால் பக்தர்களை தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டனர்.

vijayadashami festival
விஜயதசமி திருவிழா: மதுரை மீனாட்சி கோயிலில் 108 வீணை இசை வழிபாடு!

மதுரை மீனாட்சி கோயிலில் 108 வீணை இசை வழிபாடு!

மதுரை: நவராத்திரி விழாவானது நாடு முழுவதும் சுமார் 10 நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் நவராத்திரி பண்டிகை நாட்டு மக்களிடையே கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. அனைத்து கோயில்களிலும் உள்ள அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தினம் ஒரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

அந்த வரிசையில், உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி துவங்கிய நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் கோயில் முழுவதும் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு நாளும் மாலையில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிலையில் 10ஆம் நாளான நேற்று (அக். 24) மீனாட்சி அம்மன் சடை அலம்புதல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் விஜயதசமியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. இந்த வீணை இசை வழிபாட்டு நிகழ்ச்சியில் மதுரை, சென்னை, நாமக்கல், திண்டுக்கல், ஆகிய பகுதிகளில் இருந்து மாணவிகள், பேராசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வீணை இசையால் பக்தர்களை தன் வசப்படுதினர்.

இந்த வீணை வழிபாட்டின் போது மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பாடல்கள் பாடப்பட்டன. விநாயகர் பாடல் உட்பட பல்வேறு பாடல்கள் வீணை இசை வழியே இசைக்கபட்டன. மேலும் இந்த வீணை இசை வழிபாட்டை பக்தர்கள், மாணவ மாணவியர்கள், இசை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க: இனிதே நிறைவுற்ற தஞ்சை பெரிய கோயில் நவராத்திரி விழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

ABOUT THE AUTHOR

...view details