தமிழ்நாடு

tamil nadu

விவசாயி தூக்கிட்டு தற்கொலை: காவலர்கள் விசாரணை

By

Published : Oct 15, 2020, 4:37 PM IST

மதுரை: விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்துபோன விவசாயி
இறந்துபோன விவசாயி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

ராஜா அப்பகுதிகளில் விவசாய பணிகளை தொடர அருகிலுள்ளவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி தனது நண்பரான விராலிபட்டி பகுதியை சேர்ந்த சின்னன் என்பவருக்கு கொடுத்துள்ளார். கொடுத்த கடன் தொகையை சின்னன் திருப்பி தராமல் கடந்த 7 வருடங்களான ஏமாற்றியுள்ளார்.
இதனால் ராஜா வாங்கிய ரூ.1 லட்சம் கடனுக்காக வட்டியாக ரூ.2 லட்ச ரூபாய் திருப்பி செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதல் வட்டி கேட்டு பணம் கொடுத்தவர்கள் ராஜாவை தொந்தரவு செய்ததால் சின்னனிடம் கொடுத்த கடனை ராஜா திருப்பி கேட்டுள்ளார்.

ஆனால் சின்னன் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜா யாரும் வீட்டில் இல்லாத போது நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை கைப்பற்றிய வாடிப்பட்டி காவல்துறையினர் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு கந்து வட்டி கொடுமை காரணமா? அல்லது இறந்த நபரிடம் பலர் கடன் வாங்கி திருப்பி தராததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பன போன்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details