தமிழ்நாடு

tamil nadu

இந்திய கால்பந்து அணியை தேர்வு செய்ய ஜோதிடர் நியமனமா? சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அமைச்சர் அளித்த பதில் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 12:29 PM IST

Su Venkatesan MP: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், இந்திய கால்பந்து அணி வீரர்கள் தேர்வுக்கு ஜோதிடர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து கேட்ட கேள்விக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பதிலளித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணியை தேர்வு செய்ய ஜோதிடர் நியமனம் குறித்த அனுராக் தாக்கூர் பதில்
இந்திய கால்பந்து அணியை தேர்வு செய்ய ஜோதிடர் நியமனம் குறித்த அனுராக் தாக்கூர் பதில்

மதுரை: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், இந்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூரிடம், “இந்திய கால்பந்து குழு வீரர்கள் தேர்வுக்கு ஜோதிடர் நியமிக்கப்பட்டாரா? இது போன்ற செயல்பாடு இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் கெடுத்து விடாதா?” என எழுப்பிய கேள்வி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "நாடாளுமன்றத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சரிடம், இந்திய கால்பந்து குழு வீரர்களைத் தேர்ந்தெடுக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஜோதிடர் ஒருவரின் பணியைப் பயன்படுத்தியுள்ளதாக வந்துள்ள செய்தி குறித்து அரசுக்குத் தெரியும் எனில், விவரங்களை தாருங்கள்.

இப்படிப்பட்ட செயல்பாடுகள் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் கெடுத்து விடாதா? இது குறித்து அரசு ஏதேனும் அறிவுரைகளை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளதா?” என்று நட்சத்திரக் கேள்வி எண் 38/05.12.2023 வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் அனுராக் சிங் தாகூர், “இப்பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் ராகுல் மேரா இடையேயான வழக்கு (எண் 3047-48:2022) தொடர்புடையது. உச்ச நீதிமன்ற ஆணையின்படி, தாக்கல் செய்யப்பட்டுள்ள தடய தணிக்கை அறிக்கை வரம்பிற்குள் வரக் கூடியது.

உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு சட்ட ஆலோசகர், அந்த அறிக்கையை சீல் இடப்பட்ட உறையில் தந்துள்ளார். எனவே, இது குறித்த விவரங்களை அரசு பகிர்ந்து கொள்ள இயலாது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.4,000 கோடிக்கான வெள்ளை அறிக்கை வேண்டும்.. அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்களின் அதிருப்தியான கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details