தமிழ்நாடு

tamil nadu

திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் - முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரித்த தெற்கு ரயில்வே!

By

Published : Mar 25, 2023, 2:20 PM IST

பயணிகளின் நலனுக்காக நான்கு முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளுடன் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

railway
தெற்கு ரயில்வே

மதுரை: வார இறுதி நாட்களில் ரயில் பயணிகள் அதிகளவில் பயணம் மேற்கொள்கின்றனர். ஆகையால் பயணிகளின் நலன் மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்து உள்ளது.

அதன்படி திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06040) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) அன்று மாலை 06.00 மணிக்கு புறப்பட்டு இரவு 08.35 மணிக்கு மதுரை வந்து சேரும். பின்பு மதுரையில் இருந்து இரவு 08.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (மார்ச் 27) காலை 06.15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் இந்த ரயிலில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டியுடன் கூடிய மாற்று திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: Summer Special Train: தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக காசிக்கு சிறப்பு ரயில்!

ABOUT THE AUTHOR

...view details