தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் ரயில்வே, அஞ்சல் துறையின் முதல்சேவை: சென்னைக்கு சென்ற 300 கிலோ ஏலக்காய்!

By

Published : Dec 23, 2022, 5:00 PM IST

இந்திய ரயில்வே மற்றும் அஞ்சல் துறை இணைந்து நடத்தும் பார்சல் சேவையின் முயற்சியாக மதுரையிலிருந்து சென்னைக்கு தேஜஸ் ரயில் மூலம் 300 கிலோ ஏலக்காய் கொண்டு செல்லப்பட்டது.

ரயில்வே மற்றும் அஞ்சல் துறையின் முதல் சேவை: சென்னைக்கு சென்ற 300 கிலோ ஏலக்காய்!
ரயில்வே மற்றும் அஞ்சல் துறையின் முதல் சேவை: சென்னைக்கு சென்ற 300 கிலோ ஏலக்காய்!

தமிழ்நாட்டில் ரயில்வே, அஞ்சல் துறையின் முதல்சேவை: சென்னைக்கு சென்ற 300 கிலோ ஏலக்காய்!

மதுரை: இந்திய ரயில்வே மற்றும் அஞ்சல் துறை இணைந்து நடத்தும் ரயில்வே பார்சல் சேவை, இந்தியாவின் வட மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, கடந்த வாரம் மதுரையில் ரயில்வே வாரிய இயக்குநர் சத்யகுமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து ரயில்வே பார்சல்களை ‌ உற்பத்தியாகும் இடத்திலிருந்து, வாடிக்கையாளரின் வாசலுக்கு கொண்டு சேர்க்கும் திட்டத்திற்காக ’இந்திய அஞ்சல் துறை’ முயற்சி எடுத்து, சென்னைக்குச் செல்லும் சரக்குகளை சேகரித்து வைத்தது.

பசுமலையில் உற்பத்தியாகும் 250 கிலோ ஆயுர்வேத மருந்துகள் மற்றும் 300 கிலோ ஏலக்காய் ஆகியவை முதன்முறையாக மதுரையிலிருந்து சென்னைக்கு தேஜஸ் ரயில் மூலம் அனுப்பப்பட்டன. இதன் துவக்க விழா மதுரை ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ரதிபிரியா, போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜெய்சங்கர், தபால் துறை இயக்குநர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ரேஷன் கடை விற்பனையாளர்கள் நியமனம் - உரிய தேர்வு நடைமுறைகளை பின்பற்றக்கோரி வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details