தமிழ்நாடு

tamil nadu

மாட்டுத்தாவணி அருகே அமையும் மின் மயான பணிகள் 3 மாதங்களில் நிறைவடையும் - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அறிவிப்பு

By

Published : Jul 1, 2022, 8:34 AM IST

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமையும் மின் மயான பணிகள 3 மாதத்திற்குள் நிறைவடையும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

மதுரை மாநகரில் புதிய மின் மயானம் அமைக்கிறது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்
மதுரை மாநகரில் புதிய மின் மயானம் அமைக்கிறது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்

மதுரை: இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிக, லாப நோக்கின்றி, பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவு மண்டலம் 2, வார்டு 27 மதுரை புதுக்குளம் கண்மாய் பகுதியில், சுமார் 52 சென்ட் பரப்பளவில் மின் மயானத்தை (Electric Hi-tech Gasifier), தனது சொந்தச் செலவில் புதிதாக அமைப்பதோடு, மின் மயானத்தில் விசாலமான வாகன நிறுத்துமிடம், இறந்தவர் உடலுக்கு இறுதி மரியாதை சடங்கு கூடம், இரங்கல் கூட்ட அறை, வருகை தருவோர் காத்திருக்க ஒர் அரங்கு போதுமான நீர் வசதிகளுடன், தேவையான அளவுக்கு நவீன கழிப்பிட வசதிகள், அஸ்தி பெறுவதற்கான வசதி, உள்ளிட்டவை அமைக்கப்படும்.

மதுரை மாநகராட்சியுடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டு, மின் மயானம் அமைத்திடும் கட்டடப் பணியினை கடந்த ஆண்டு துவக்கியது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கற்பக நகரத்தார் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், மேற்கூறிய இடத்தில் Electric Gasifier மின் மயானத்தை அமைக்கக் கூடாது என வழக்குத் தொடர்ந்த காரணத்தினால் மின் மயானம் அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததோடு, பொதுமக்களின் நலன் கருதி அமைத்திடும் மின்மயான பணிகளை உடனே தொடங்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்கண்ட இடத்தில் மின் மயானம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை தற்போது மீண்டும் துவங்கியதோடு, சுமார் 3 மாத காலத்திற்குள் இப்பணிகளை முற்றிலும் முடிக்கவும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது"என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குடியிருப்புப்பகுதிக்குள் மின்மயானம் அமைவதைத் தடை செய்யமுடியாது - உயர் நீதிமன்றக்கிளை!

ABOUT THE AUTHOR

...view details