தமிழ்நாடு

tamil nadu

Palani kumbabishekam: மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

By

Published : Jan 26, 2023, 7:07 AM IST

பழனி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரையில் இருந்து பழனி செல்வதற்கான சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பழனி கும்பாபிஷேகம்.. சிறப்பு ரயிலை அறிவித்தது தெற்கு ரயில்வே!
பழனி கும்பாபிஷேகம்.. சிறப்பு ரயிலை அறிவித்தது தெற்கு ரயில்வே!

மதுரை: புகழ் பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம், நாளை (ஜன.27) நடைபெற இருக்கிறது. இதனையடுத்து பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் இதனைக் கருத்தில் கொண்ட தெற்கு ரயில்வே, பயணிகளின் வசதிக்காக மதுரை - பழனி இடையே ஒரு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி மதுரை - பழனி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06080) ஜனவரி 26, 27 மற்றும் பிப்ரவரி 3, 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்குப் பழனிக்குச் செல்லும். அதேபோல் மறு மார்க்கத்தில் இதே நாட்களில் பழனி - மதுரை முன்பதிவில்லா விரைவு ரயில் (06079), பழனியிலிருந்து மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு, மாலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் இந்த ரயில்களில் 10 2ஆம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் இரண்டு 2ஆம் வகுப்பு பெட்டியுடன் கூடிய ரயில், மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Palani Kumbabishekam:பழனி கோயில் கும்பாபிஷேகத்திற்கான 4ஆம் கால யாக பூஜை தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details