தமிழ்நாடு

tamil nadu

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை ஜனவரி வரை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 10:23 PM IST

Extension of Nagercoil - Tambaram special train: வார இறுதி நாள் மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் இடையிலான சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

southern-railway-extension-of-nagercoil-tambaram-special-train-service-for-festivals
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க 'தாம்பரம் - நாகர்கோவில்' சிறப்பு ரயில் சேவை ஜனவரி வரை நீட்டிப்பு!

மதுரை:பண்டிகை கால கூட்ட நெரிசலைச் சமாளிக்க 'நாகர்கோவில் - தாம்பரம்' இடையிலான சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. வார இறுதி நாள் மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக 'தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவையை வருகின்ற ஜனவரி மாதம் வரை தெற்கு ரயில்வே நீட்டிப்பு செய்துள்ளது.

தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில்கள் நவம்பர் மாத மூன்றாவது வாரம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. வார இறுதி நாள் மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலைச் சமாளிக்க தற்போது இந்த ரயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாகர்கோவிலில் இருந்து மாலை 04.35 மணிக்குப் புறப்படும் தாம்பரம் சிறப்பு ரயில் (06012) நவம்பர் 26, டிசம்பர் 3, 10, 17, 24, 31, ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்குத் தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 08.05 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் (06011) நவம்பர் 27, டிசம்பர் 4, 11, 18, 25, ஜனவரி 1, 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு இரவு 08.45 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும் என தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்! "அரோகரா.. அரோகரா.." என பக்தர்கள் முழக்கம்!

ABOUT THE AUTHOR

...view details