தமிழ்நாடு

tamil nadu

சிவகாசி வழித்தடத்தில் பாதுகாப்பு பணிகள்.. இரண்டு நாட்களுக்கு ரயில் போக்குவரத்தில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 10:51 PM IST

Train rescheduled in Southern railway: தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட சிவகாசி, சேரன்மகாதேவி, செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் நடைபெறுவதால், இரண்டு நாட்களுக்கு சில ரயில்களின் நேரங்களில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

மதுரை:தெற்கு ரயில்வே மதுரை மண்டலத்திற்குஉட்பட்டவிருதுநகர் மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களில் இரட்டை ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள சிவகாசி, சேரன்மகாதேவி, செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் விருதுநகர், திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இணையான போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் (Traffic Block and the commissioning of new blocks) நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அக்டோபர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் - பாலக்காடு ரயில் (16732) ஆகியவை கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் அக்டோபர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் செங்கோட்டை - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06684) மற்றும் திருநெல்வேலி - செங்கோட்டைச் சிறப்பு ரயில் (06687) ஆகியவை சேரன்மகாதேவி - திருநெல்வேலி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில் (22628) அக்டோபர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் திருவனந்தபுரத்திலிருந்து 40 நிமிடங்கள் கால தாமதமாக, மதியம் 12.15 மணிக்குப் புறப்படும். அதேபோல் செங்கோட்டை - மதுரை சிறப்பு ரயில் (06664), அக்டோபர் 5ஆம் தேதி மட்டும் செங்கோட்டையிலிருந்து பகல் 12.10 பதிலாக 1 மணி நேரம் 40 நிமிடங்கள் கால தாமதமாக மதியம் 01.50 மணிக்குப் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிறிய சந்தில் சிக்கிய நாய் குட்டி.. தாய் நாயின் பாசப்போராட்டம்.. கிருஷ்ணகிரி நெகிழ்ச்சி சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details