தமிழ்நாடு

tamil nadu

‘திமுகவின் ஒன்றிணைவோம் திட்டத்தால் என்ன பயன் கிடைத்தது?’ - அமைச்சர் செல்லூர் ராஜு

By

Published : May 30, 2020, 6:20 PM IST

மதுரை: திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த “ஒன்றிணைவோம் வா” திட்டத்தின் மூலமாக பொது மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது என தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரையில் மாடக்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகள் ஆகியவற்றை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, “கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி முதலமைச்சர் உத்தரவுப்படி எளிமையாக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் யார் வேண்டுமாலும் வாங்கிக்கொள்ளலாம். ரேஷன் கார்டு மட்டும் காட்டி கடனை பெற்றுக்கொள்ளலாம்.

திமுக தலைவரின் ஒன்றிணைவோம் வா திட்டம் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது? திமுக அளித்த புகார் மனுக்களில் ரேஷன் கடைகள் சம்பந்தமாகவோ, உணவு கிடைக்கவில்லை என்றோ எந்தப் புகார் மனுவும் இல்லை. பத்து, இருபது பேருக்கு உதவி செய்துவிட்டு, லட்சக்கணக்கில் உதவியதாக திமுக கூறிவருகிறுது. அதேபோல், ஒரு சில மனுக்களை வைத்துக்கொண்டு லட்சக்கணக்கில் புகார் மனுக்கள் பெற்றுள்ளோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.

தமிழ்நாடு மக்களிடையே முதலமைச்சர் நற்பெயர் வாங்குகிறார் என்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் குறை கூறுகிறார். இக்கட்டான நேரத்தில் முதலமைச்சரின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் குறை கூறும் ஸ்டாலினை பற்றி மக்கள் தெரிந்து கொள்வார்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்” என்றார். மேலும், இந்நியாவில் ஊரடங்கு தோல்வி என்று ராகுல்காந்தி கூறியது குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டின் ஊரடங்கைப் பற்றி குறிப்பிட்டு அவர் பேசியிருக்க மாட்டார் என்றார்.

இதையும் படிங்க: கரோனாவை விரட்டும் ஆற்றல் மக்களிடம்தான் உள்ளது: அமைச்சர் செல்லூர் ராஜு!

ABOUT THE AUTHOR

...view details