தமிழ்நாடு

tamil nadu

'மீண்டும் மோடி பிரதமரானால் இந்தியாவை அழித்துவிடுவார்' - சீமான் பேச்சு

By

Published : Jul 26, 2023, 10:28 PM IST

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி பிரதமரானால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும் என்று கூறிய சீமான் அதிமுகவின் ஊழல் பட்டியலை அண்ணாமலை ஏன் வெளியிடவில்லை எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

'மீண்டும் மோடி பிரதமரானால் இந்தியாவை அழித்துவிடுவார்' என மதுரையில் சீமான் பேச்சு

மதுரை:நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரை பரவை பகுதியிலுள்ள தனியார் விடுதியில் இன்று (ஜூலை 26) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீமான் நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 'தமிழகத்தில் கடலூரில் விவசாய நிலங்களை அழித்து என்எல்சி நிறுவனம் (NLC India Limited) நிலங்களை கையகப்படுத்துகிறது. விவசாயிகளை மாநில அரசும், மத்திய அரசும் வஞ்சிப்பதுடன் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையமும் என்எல்சியும் அமைக்கிறது என்றும் இது நல்லதா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், விவசாய நிலங்களை அழிப்பது ஏற்புடையது அல்ல என்றும் அவர் கூறினார்.

அதிமுகவினர் செய்த ஊழல் பட்டியல் எங்கே?:அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பதாகவும், அரசியல் லாபத்துக்காக அண்ணாமலை பேசுவதாகவும் தெரிவித்தார். திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை அதிமுகவினர் செய்த ஊழல் பட்டியல்களை ஏன் வெளியிடவில்லை? என்றும் அதிமுகவினர்கள் புனிதர்களா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றியும் வாய் திறக்கவில்லை என்றும்; அங்கே 24 மணிநேரமும் மின் இணைப்பு இருக்கும் என்றும்; ஆனால், சம்பவத்தன்று மின் இணைப்பை துண்டிக்கச் சொன்னது யார்? என்றும் கேள்வியெழுப்பினார்.

டாஸ்மாக் கடைக்கு 'கருணாநிதி' பெயர்:மணிப்பூர் கலவரம் (Manipur Violence) பற்றி திமுகவினர் பேசுவது நியாயமா? குஜராத் கலவரத்தை (Gujarat riots 2002) நியாயப்படுத்தி அப்போதைய கருணாநிதி தலைமையிலான திமுகவினர் பேசியதாகவும், இப்போது எதிராக பேசுவதாகவும் சாடினார்.

தமிழகத்தில் நூலகம், பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களுக்கு கருணாநிதி பெயர் வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாஸ்மாக் கடைக்கு ஏன் கருணாநிதி பெயர் வைக்கவில்லை? என்றும் பகிரங்கமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழக மீனவர்கள் கைது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழக முதலமைச்சர் ஒரு போஸ்ட்மேன் தான் என்றார். மேலும் காங்கிரஸ், திமுக கூட்டணியும், அதிமுக - பாஜக கூட்டணியும் ஓட்டு அரசியலுக்காக பல திட்டங்களை தருவதாக தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக கூறினார்.

தண்ணீரில் மலரும் தாமரை தமிழகத்தில் மலராது:தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் முன்னால் ஐபிஎஸ் அதிகாரி பயிற்சியின் போதும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருப்பார். தற்போது உடலை FITஆக வைத்துக்கொள்ள நினைத்து நடைப்பயிற்சி மேற்கொள்ள உள்ளார், அண்ணாமலை. இதன் மூலம் தமிழகத்தில் தாமரை மலராது. தண்ணீரில் தான் தாமரை மலரும்; தமிழகத்தில் தாமரை மலராது என்றார்.

மீண்டும் மோடி பிரதமரானால் இந்தியாவை அழித்துவிடுவார்: ’சந்திரயான் (Chandrayaan 3) பற்றி மோடி பாராட்டிப் பேசி வருகின்றார். அங்கே குடியேற நினைத்தால் முதலில் பிரதமர் மோடி யாரை அனுமதிப்பார் இந்துக்களையா? முஸ்லீம்களையா? கிறிஸ்தவர்களையா? என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கூறவேண்டும் என்றார். பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்து தமிழகத்திற்கு என்ன செய்தது? அடுத்த பிரதமராக மோடி வந்தால் இந்தியாவை அழித்து விடுவார். அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும்’ என்று பேசினார்.

இதையும் படிங்க: பயிர்களின் நடுவே NLC-யின் கால்வாய் வெட்டும் பணி; கண்ணீரில் விவசாயிகள் - கலெக்டரின் பதில் என்ன?

ABOUT THE AUTHOR

...view details