தமிழ்நாடு

tamil nadu

ஒரு லட்சம் முகக் கவசங்கள் வழங்கிய சு.வெங்கடேசன் எம்பி!

By

Published : Apr 11, 2020, 9:57 AM IST

மதுரை: மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு லட்சம் முகக்கவசங்களை மக்கள் நலப் பணியாளர்களுக்கு வழங்கினார்.

su venkadesan
su venkadesan

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், கரோனா வைரஸ் தொற்று பரவிவருவதைத் தடுக்கும் விதமாக, தொடர்ந்து பணியாற்றி வரும் மக்கள் நலப் பணியாளர்களான காவல்துறையினர், மாநகராட்சி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு முகக்கவசங்களை, அதன் துறைச் சார்ந்த உயர் அலுவலர்களிடம் நேரில் சந்தித்து வழங்கினார்.

இதில், மதுரை காவல்துறை ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் மதுரை மாநகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு 18 ஆயிரம் முகக்கவசங்களும், புறநகர் பகுதியில் உள்ள காவலர்களுக்கு 12 ஆயிரம் முகக்கவசங்களையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோரிடம் நேரில் சந்தித்து வழங்கினார்.

மாநகராட்சி பணியாளர்களுக்கு 60 ஆயிரம் முகக்கவசங்களை மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகனிடமும், மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் பிரியராஜிடம் சுகாதாரப் பணியாளர்களுக்கென்று, 10 ஆயிரம் முகக்கவசங்களும் வழங்கவுள்ளார்.

மொத்தம் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1 லட்சம் முகக்கவசங்களை வழங்குவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதையும் படிங்க:கேமிங் பிரியர்களுக்கு பேஸ்புக்கின் அதிரடித் திட்டம்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details