தமிழ்நாடு

tamil nadu

ஊர்மெச்சிகுளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

By

Published : Oct 30, 2022, 9:48 AM IST

வைகை ஆற்றிலிருந்து ஊர்மெச்சிகுளம் கண்மாய்க்கு வரும் பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

ஊர்மெச்சிகுளம் கண்மாய்க்கு வரும் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ஊர்மெச்சிகுளம் கண்மாய்க்கு வரும் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: ஊர்மெச்சி குளத்தை சேர்ந்த ஸ்ரீதர் ஆறுமுகம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 5 தென் மாவட்டங்களுக்கு நீராதாரம் வைகை இருந்து வருகிறது. இந்த வைகையில் இருந்து பரவை- ஊர்மெச்சி குளம் பகுதியில் உள்ள பெரிய கண்மாய்க்கு கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது.

இந்நிலையில் கால்வாய் பகுதிகள் கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், வீடுகள் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பினால் நீர்வரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே ஊர்மெச்சிகுளம் கால்வாய் பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடிட்ருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் நீர்நிலை ஆக்கிரப்புகளை அகற்றுவது குறித்து பெரியார் பாசன பொதுப்பணித்துறை மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஒன்றிணைந்து அளவீடு செய்து மூன்று வாரத்தில் அறிக்கை தயாரிக்க வேண்டும். அதில் ஆக்கிரமிப்புகளில் உள்ள கட்டடங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் 8 வாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:"முல்லைப் பெரியாறு அணை விவகாரம் - கேரளா ஒத்துழைப்பு மறுப்பு"

ABOUT THE AUTHOR

...view details