தமிழ்நாடு

tamil nadu

Madurai Train Fire Accident: "எரியும் ரயிலிலிருந்து மரண ஓலம்".. விபத்தை நேரில்பார்த்தவர்களின் விளக்கம்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 11:12 AM IST

தென்னிந்தியாவிற்கு சுற்றுலா வந்த சுற்றுலாக் குழுவினரின் ரயில் தீடிரென தீப்பிடித்து எரிந்து 9 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்தை நேரில் பார்த்த குடியிருப்பு வாசி விபத்து குறித்து கூறியுள்ளார்.

மதுரையில் திடீரென பற்றி எரிந்த ரயில்
மதுரையில் திடீரென பற்றி எரிந்த ரயில்

மதுரையில் திடீரென பற்றி எரிந்த ரயில்

மதுரை: உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவிற்கு சுற்றுலா வந்த குழுவினர் நேற்று நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை மதுரை வந்தடைந்த நிலையில், பாரத் கவுரவ் (சுற்றுலா) ரயில் பெட்டி தீடிரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகில் இருந்த குடியிருப்பு வாசியான ஆட்டோ டிரைவர் மன்னன் பிரகாஷ் கூறுகையில், "திடீரென வந்த பெண்களின் சத்தத்தால் அதிர்ந்து வெளியே வந்தேன். அப்போது ரயில் பெட்டி முழுவதும் தீயில் எரிந்து கொண்டிருந்தது. அலறியபடி பலர் வெளியேறினர். எஸ்.எஸ்.காலனி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்த தீ விபத்திற்கு காரணம் ரயிலில் சிலிண்டர் பயன்படுத்தியது தான். ரயிலில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது எனக் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டதே விபத்துக்கு காரணம்" என்று அவர் கூறினார். எரியும் ரயிலை நோக்கி சென்று மீட்பு பணியில் ஈடுபட முயன்றதாகவும், ஆனால் கடும் வெக்கையின் காரணமாக ரயிலை நெருங்கக் கூட முடியவில்லை என மன்னன் கூறினார்.

தீ லேசாக பரவத்துவங்கியபோதே 90 சதவீத பயணிகள் குதித்து விட்டதால் உயிர் தப்பினர் என்றும், இல்லாவிட்டால் உயிர்ச்சேதம் மேலும் அதிகரித்திருக்கும் எனவும் அதிர்ச்சிவிலகாமல் கூறினார் மன்னன்.

இதையும் படிங்க:Madurai Train Fire Update : உத்தரபிரதேசம் - ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் தீ விபத்து - 9 பேர் பலி!

ABOUT THE AUTHOR

...view details