தமிழ்நாடு

tamil nadu

ஈவன்ட் மேனேஜ்மென்ட்... பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்கள்

By

Published : Aug 20, 2021, 4:56 PM IST

Updated : Aug 20, 2021, 7:20 PM IST

ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் பல இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் தொடர்பாக புகார் வந்திருக்கிறது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

prostitution-in-the-name-of-event-management-in-aranthangi
ஈவன்ட் மேனேஜ்மென்ட்...பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்கள்- காவலர் உட்பட இருவர் மீது புகார்

மதுரை:காரைக்குடி, அறந்தாங்கி, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு ஈவன்ட் மேனேஜ்மென்ட் செய்துவருபவர் ராஜா. இவர், திருமண விழாவுக்கு வருகை தருகின்ற விருந்தினர்களை வரவேற்க இளம்பெண்களை வரவேற்பாளர் பணிக்கு அழைத்து செல்வது வழக்கம்.

குடும்ப சூழ்நிலை காரணமாக வரவேற்பாளர் பணிக்கு வரும் பெண்களிடம் இவர், ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில், வரவேற்பாளராக வந்த தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த பெண்ணிடமும், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடமும் ஆசைவார்த்தை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த ராஜா முயன்றுள்ளார்.

அடித்து துவைத்த உறவினர்கள்

இதில், அதிர்ச்சியடைந்த அந்த இரண்டு பெண்களும், தங்களுடைய உறவினர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள், ராஜாவுக்கு ஸ்கெட்ச் போட தொடங்கியுள்ளனர்.

அதன்படி, காரைக்குடி அருகேயுள்ள அமராவதி புதூரில் நிகழ்ச்சி ஒன்று நடக்கவுள்ளதாகவும், அதற்கு 20 பெண்கள் வரவேற்பாளர்களாக வேண்டும் என்றும் ராஜாவிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் பேசியுள்ளனர். மேலும், நிகழ்ச்சி நடக்கும் இடத்தை வந்து பார்வையிடுமாறும், நேரில் வந்து முன்பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து ராஜா அவர்கள் சொன்ன இடத்திற்கு வந்துள்ளார். அங்கு வைத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் ராஜாவை அடித்து துவைத்துள்ளனர். மேலும், அவரால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களை அவரை அடிக்க வைத்து வீடியோ எடுத்துள்ளனர்.

சாக்கோட்டை காவலரின் பங்கு

மீண்டும், இதுபோல் பாலியல் தொழிலுக்கு பெண்களை அழைக்கக்கூடாது என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் ராஜாவை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனை, ராஜா தனது நண்பரும் சாக்கோட்டை காவல் நிலைய எழுத்தாளருமான மாயவதனிடம் கூறியுள்ளார்.

தனது மேல் அதிகாரிகளுக்குகூட தெரியாமல் தனது காவல் நிலைய எல்லையில் இல்லாத ஒரு சம்பவத்திற்காக உடனடியாக களத்தில் இறங்கிய மாயவதன் ராஜாவின் பாலியல் தொழிலுக்கு இணங்காத இரு பெண்களையும் தொடர்புகொண்டு, 'ராஜாவை நீங்கள் ஆள்வைத்து கடத்தி சென்று அடித்து துன்புறுத்தி அவரிடம் இருந்து பணம் நகைகளை பறித்துள்ளீர்கள் என வழக்கு போடுவேன்' என மிரட்டியுள்ளார்.

இதில், பயந்த அப்பெண்கள் கும்பகோணம் மகளிர் ஆணையம், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் ராஜா மீதும், அவருக்கு துணையாக செயல்படும் மாயவதன் மீதும் புகார் அளித்துள்ளனர். வறுமை காரணமாக வேலைக்கு வரும் பெண்களை ஆசை வார்த்தை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பாலியல் சீண்டல்.. இளைஞருக்கு பாடம் புகட்டிய அஸ்ஸாம் ஜான்சி ராணி!

Last Updated : Aug 20, 2021, 7:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details