தமிழ்நாடு

tamil nadu

இளைஞர்கள் தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? 12 வாரத்தில் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

By

Published : Jan 11, 2023, 8:56 AM IST

Updated : Jan 11, 2023, 3:55 PM IST

இளைஞர்கள் தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை 12 வாரத்தில் தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜன.12 இளைஞர்கள் தினத்தன்று டாஸ்மாக் விடுமுறை - உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை
ஜன.12 இளைஞர்கள் தினத்தன்று டாஸ்மாக் விடுமுறை - உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை

மதுரை:கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியா முழுவதும் ஜனவரி 12ஆம் தேதி தேசிய இளைஞர்கள் தினம்(National Youth Day) கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இளைஞர்கள் பலர் மது அருந்தி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.

மதுபான கடைகள் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் ஆகிய 8 நாட்களில் விடுமுறை விடப்படுகிறது. இந்த வரிசையில் தேசிய இளைஞர்கள் தினமும் சேர்க்கப்பட வேண்டும்.

தேசிய இளைஞர்கள் தினத்தன்று மது அருந்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு செய்ய வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, தேசிய இளைஞர்கள் தினத்தன்று தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர், தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் கலால் துறை செயலர், மனுதாரரின் மனுவை சட்டத்திற்கு உட்பட்டு 12 வாரத்திற்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளியில் 5 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்க அனுமதி

Last Updated : Jan 11, 2023, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details