தமிழ்நாடு

tamil nadu

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய உத்தரவு!

By

Published : Jul 19, 2022, 10:25 PM IST

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறித்து ட்வீட் செய்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றக்கிளை பதிவாளருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு
சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு

மதுரை:நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் புகைப்படத்தைப் பதிவு செய்து, பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான
யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் அவதூறாக நேற்று இரவு 07.54 மணிக்கு ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதாகவும், அதற்கான மனுவைத் தாக்கல் செய்யுமாறும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதிவுத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். அதே சமயம் இது குறித்து அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கலவரத்தால் பாதிக்கப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க ஆலோசனை; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details