தமிழ்நாடு

tamil nadu

’பாஜக உதவியுடன் அதிமுக வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு’

By

Published : Apr 14, 2021, 6:19 PM IST

மதுரை : அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல் திருமாவளவன், “வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக பாஜகவின் உதவியோடு வாக்கு இயந்திரங்களில் அதிமுகவினர் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளது” என்றார்.

தொல் திருமாவளவன் பேட்டி
தொல் திருமாவளவன் பேட்டி

மதுரை மாநகராட்சி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சமத்துவத்தை நிலைநாட்டுவதே எங்கள் நோக்கம். தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக கூட்டணி தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளது.

காரணம் தேர்தலுக்கு முந்தைய கணிப்பு, புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையின்படி திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்குப் பின் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். எங்களுக்கு மோடி உறுதுணையாக உள்ளார் எனக் கூறுகின்றனர். இது எங்களுக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

தொல் திருமாவளவன் பேட்டி

இந்தியாவிற்கு தேவையான கரோனா தடுப்பூசிகளை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். அதன் பிறகுதான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அம்பேத்கரின் 130ஆவது பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஐ.நா சபையிலும் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஒரே தேசம், ஒரே கோட்பாடு என சனாதன சக்திகள் செயல்படுகின்றன.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் இதற்கு எதிராகப் போராட வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரியில் பாஜக வேரூன்றப் பார்க்கிறது. அதைத் தடுக்க வேண்டும். நாங்கள் சிறுபான்மையினரை நம்பி தேர்தலில் நிற்கவில்லை எனக் கூறுகின்றனர்” என்றார்.

இதையும் படிங்க : அம்பேத்கரின் சட்டக் கட்டமைப்பை பாஜகவால் அசைக்க முடியவில்லை - மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details