தமிழ்நாடு

tamil nadu

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மக்களே உருவாக்கிய நூலகம் திறப்பு

By

Published : Apr 23, 2022, 7:50 PM IST

Updated : Apr 23, 2022, 8:45 PM IST

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மக்களால் உருவாகப்பட்ட ‘சட்ட மேதை’ என்னும் பெயர் கொண்ட நூலகம் திறக்கப்பட்டது.

உலக புத்தக தினம்: கிராம மக்கள் உருவாக்கிய நூலகத்துக்கு புத்தகங்களை தானமாக வழங்கிய சமூக ஆர்வலர்
உலக புத்தக தினம்: கிராம மக்கள் உருவாக்கிய நூலகத்துக்கு புத்தகங்களை தானமாக வழங்கிய சமூக ஆர்வலர்

மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே உள்ள அ.கொக்குளம் அயோத்திதாசர் நகரை சேர்ந்த பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் நூலகம் அமைத்துள்ளனர். இந்த நூலகத்தை, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், இதழ் தான இயக்கத்தின் அமைப்பாளருமான அசோக்குமார் திறந்து வைத்தார். அத்துடன் 50-க்கும் மேற்பட்ட நூல்களை கொடையாக வழங்கினார்.

இதுகுறித்து அசோக்குமார் கூறுகையில், "கிராம மக்களே உருவாக்கிய நூலகத்திற்கு நூல்களை வழங்கி திறந்து வைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். நான் வழங்கிய புத்தகங்கள் இதழ் தானம் மூலமாக பல்வேறு நபர்களிடமிருந்து பெறப்பட்டவை.
எங்கெல்லாம் நூலகங்கள் செயல்படாமலும், நூல்கள் பற்றாக்குறையுடன் உள்ளனவோ, அங்கெல்லாம் சென்று நேரடியாக புத்தகங்களை வழங்கி வருகிறோன். படித்து முடித்த புத்தகங்கள் அலமாரியில் உறங்கக்கூடாது. அதனை மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களது பணி" என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய உள்ளூர் இளைஞர் தமிழ்முதல்வன் கூறுகையில் "உலக புத்தக தினத்தை முன்னிட்டு எங்கள் கிராமத்து மக்களுடன் சேர்ந்து ‘சட்டமேதை படிப்பகம்’ என்ற நூலகத்தை உருவாக்கியுள்ளோம். இந்த நூலகத்தை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்" என்றார்.

இதையும் படிங்க:அடையாளம்தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்

Last Updated : Apr 23, 2022, 8:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details